Sunday, July 3, 2011

நான்

நானாக
நான் என்னுள் புகுந்து. . .
நானாக
நான் என்பதை  மறந்து. . .
நான் என்னும் என்னை
என்னுளே நான் தேடி. . .
தெரிந்தனன் 
நாணல் யாம். . .

Wednesday, February 16, 2011

காத்திருப்பேன்....

இருட்டும் இரவும்
என் நண்பர்கள் ஆகின்றன...
வழி தொலைந்தேன்
வலி எனைத்தேடி வந்தன...
என் ஊமையான ஞாபகங்கள்
உன்னைபற்றி பேசுகின்றன...
என் ஞாபங்களில் உன்னைபற்றிய
உரையாடல்கள் கேட்கின்றன...
நம் கடந்த ஞாபகங்கள்
நம்மைபற்றி சிந்திக்கின்றன...
என்னை நான் உன்னிடம் கொடுத்து
என்னுள்ளே உன்னோடு வாழ்கிறேன்...
காத்திருப்பேன் நான் உனக்கு
என் ஜென்மம் முழுவதும்...