வெற்றி ........
உழைக்காதவனின் ........
கானல் நீர்...........
நூற்றாண்டை கடந்த அந்த நகராட்ச்சி நடுநிலைப்பள்ளி, நகரத்தின் மத்தியில் அமைந்து இருந்தது. பல நல்லெண்ணம் படைத்தவர்கள் கொடுத்த நன்கொடையால் சில புதிய கட்டிடங்கள், உயிரை கையில் பிடித்து கொண்டு இருந்த பழைய கட்டிடங்களும் இருந்தன.
ஒவ்வொரு கட்டிடத்திலும் மூன்று,நான்கு வகுப்பறைகள் இருந்தன. ஒவ்வொரு வகுப்பறையில் தட்டி சுவர்கள் பிரிந்திருந்தன.
அந்த பள்ளியில் பயின்றவர்கள், பலர் அரசியல்வாதிகளாகவும் உயர்ந்த பதிவிகளிலும், தொழில் அதிபர்களாகவும் இருந்ததால் நன்கொடைகள் கூடுதலாகவே கிடைத்தன.
பள்ளியின் தலைமையாசிரியர் அதை நன்றாகவே பயன்படுத்தி நூலகம்,குடிநீர் வசதி,புதிய கட்டிடங்கள் போன்றவட்ட்ரை உருவாக்கி இருந்தார். ஆறாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் லக்ஷ்மி டீச்சர், தன்னுடைய அதிகாமன நேரங்களை இப்பள்ளியிலே செலவழித்தார்.
காலை ஒன்பது மணிக்கு பள்ளிக்கூடம் தொடங்கியது என்றால் அரைமணி நேரம் முன்னதாகவே வந்துவிடுவார். மாலையில் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்திவிட்டு ஏழு மணிக்குதான் வீட்டிற்க்கு போவார். அவர் வகுப்பு மாணவ,மாணவிகள் அவரை தாயை போலவே கருதுவார்கள், அவரும் அப்படிதான்.
அரசு கொடுத்திருக்கும் விடுப்பு சலுகையை பயன்படுதிகொள்ளமாட்டார். தினமும் மாணவர்களோடு களிப்பதுதான் அவருடைய கொள்ளை பிரியம்.
இன்றைக்கும் பள்ளிக்கூடம் போவதற்கு அவருக்கு பிடிக்கவில்லை. ரொம்பவும் சோர்ந்து பொய் குற்ற உணர்வுடனே கிளம்பினார்.
நேற்று பள்ளி விடும் நேரத்தில் நடந்த சம்பவம் அவர் மனதை பெரிதும் பாதித்து இருந்தது. "அவசரப்பட்டுவிட்டோம்" "அவசரப்பட்டுவிட்டோம்" லக்ஷ்மி டீச்சர் மனம் அடித்து கொண்டது.
நேற்று பள்ளிவிடும் நேரத்தில் புத்தகங்களை பையில் தினித்துகொன்டிருந்தார்கள் மாணவிகள் . மாணவி சுந்தரி, "டீச்சர் என் ஜாமெட்ரி பாக்ஸ் காணவில்லை யாரோ எடுத்துகிட்டாங்க"ன்னு முறையிட்டால்.
ஆரம்பத்தில் அந்த புகாரை சாதரணமாக எடுத்து கொண்ட லக்ஷ்மி டீச்சர், "ஏய் யாரவது எடுத்து இருந்த அவகிட்டே கொடுத்திருங்க" என்று சொன்னார்.
யாரும் பதில் சொல்லாமல் பையில் புத்தகத்தை திணித்து கொண்டு இருந்தார்கள்.
இப்போது மாணவி சுந்தரி அழுது அடம் பிடிக்க ஆரம்பித்துவிட்டாள், "எங்க அம்மா அடிப்பாங்க டீச்சர்"ன்னு அழுதுகிட்டே கூறினாள்.
இப்போது கண்டிப்பாக,"ஏய் விளையாடாதிங்க அவ ஜாமெட்ரி பாக்ஸ் கொடுத்திடுங்க" பதில் இல்லை.
சுந்தரி அழுகை குடியாது.
"யாரும் போகாதிங்க,சுந்தரி,எல்லாருடைய பையையும் வாங்கி பாரு"
மாணவி சுந்தரி ஒவ்வொரு பையையும் பார்த்தாள்.
திடிரென கத்தினாள் , " டீச்சர் மல்லிகா பையை காண்பிக்க மாட்டேன்கிற, இவ தான் எடுத்து வச்சு கிட்டு கொடுக்க மாட்டேன்கிற!"
அவ்வளவு தான் லக்ஷ்மி டீச்சர் கோபம் அதிகமானது.
குச்சியை எடுத்து முழங்காலுக்கு கிழே மல்லிகாவை அடித்தார்.
"என்ன பழக்கமடி இது,கொடுடி" "நான் எடுக்கல டீச்சர்" அடியில் வலி தாங்காமல் மல்லிகா பதில் சொன்னாள்.
" அப்ப உன் பையை காட்டுடி"
மல்லிகா பையை இன்னும் இறுக்கமாக பிடித்து கொண்டு காண்பிக்க மறுத்தாள்.
"உனக்கு முளைக்கும் போதே, எதுக்கு இந்த திருட்டு புத்தி "குச்சி முறியும் வரை அடித்தால் லக்ஷ்மி டீச்சர்.
"இல்ல டீச்சர் நான் எடுக்கல டீச்சர் எடுக்கல எடுக்கல" மல்லிகா சொன்னாலே தவிர பையை மேலும் இறுக்கமாக பிடித்து காண்பிக்க மறுத்துவிட்டாள்.
இப்போது ஆத்திரத்தில் லக்ஷ்மி டீச்சர் மல்லிகாவின் பையை பிடித்து இழுத்தார், பை கிழே விழுந்தது , உள்ளே இருந்த டிபன் பாக்ஸ் திறந்து சோறு கொட்டிச் சிதறியது.
பையில் ஜாமெட்ரி பாக்ஸ் இல்லை! லக்ஷ்மி டீச்சர் , "வெக்கித்து போய் நின்றாள்".
"ஏண்டி பையை காமிக்க மாட்டேன , மத்தியானம் சாப்பிடலைய, யாருக்கு சோறு எடுத்துட்டு போற" .
"என் தங்கச்சிக்கு டீச்சர், எங்க அப்பா சின்ன வயசுலய ஓடிபோயட்டார் . எங்க அம்மா கூலி வேலைக்கு போகுது. என் தங்கச்சி ஊனம், வீட்டிலேயே தான் இருப்ப, பள்ளிகூடதுலே போடுற மதியான சாப்பாடுல பாதிய நான் சாப்பிட்டு மீதியை என் தங்கச்சிக்கு எடுத்திட்டு போவேன் டீச்சர், நான் வரவரைக்கும் என் தங்கச்சி பட்டினிய கிடப்ப டீச்சர்" என்று மல்லிகா அழுதுகொண்டே கொட்டிய சோறை டிபன் பாக்ஸ்லே எடுத்து போட்டு கொண்டிருந்தாள்.
அதற்குள் மற்றொரு மாணவி சுமதி, "டீச்சர் சுந்தரி ஜாமெட்ரி பாக்ஸ் அவ உட்க்கார்ந்த பெஞ்ச்க்கு கிழ தான் டீச்சர் இருக்கு! பார்க்காம சொல்லிட்ட டீச்சர்......"
'எவ்வளவு பெரிய தப்பு பணித்தோம்', தவறை நினைத்து மல்லிகாவை இழுத்து ஆரத்தழுவி லக்ஷ்மி டீச்சர் அழுதாள்........
இந்த சம்பவம் ஏற்படுத்திய குற்ற உணர்வு லக்ஸ்மி டீச்சர் இன் மனதை விட்டு அகலவே இல்லை.
இப்போது கூடுதலாக மல்லிகாவின் தங்கச்சிக்கும் தனியாக ஒரு டிபன் பாக்ஸ் சோறை கட்டி கொண்டு புரபட்டாள்..........................